முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அவரது மனைவி ஆகியோரின் விளக்கமறியல் நீடிப்பு

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது மனைவிக்கு எதிரான வழக்கு இன்று வியாழக்கிழமை நுகேகொட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின்  மனைவி ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 31ஆம் திகதி, மிரிஹான பகுதியில் உள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின்  மனைவியின் இல்லத்திலிருந்து இலக்கத் தகடு இல்லாத கார் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோர்  கைது செய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்