மாணிக்கக் கல் அகழ்வு: ஒருவர் பலி

மாத்தளை – லக்கல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹத்தோட்ட அமுன பிரதேசத்தில் நேற்று புதன் கிழமை மாலை மாணிக்கக் கல் தோண்டிக் கொண்டிருந்தவர் மீது மண் சரிந்து வீழ்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.

ஹத்தோட்டை அமுன பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவரே இதன் போது உயிர் இழந்துள்ளார்.

உயிரிழந்தவர் உட்பட மேலும் நால்வர் தனியார் காணி ஒன்றில் மாணிக்கக்கல் சுரங்கம் தோண்டிய போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சடலம் லக்கல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

லக்கல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்