சட்டவிரோத வெளிநாட்டு மதுபான போத்தல்கள், சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

கொழும்பு, புறக்கோட்டை பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் சிகரட்டுகளுடன் ஒருவர் நேற்று புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபரிடம் இருந்து 210 மதுபான போத்தல்கள் மற்றும் 50,000 சிகரட்டுக்கள் அடங்கிய 250 சிகரட்டு பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்