16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை?

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் புதிய சட்டம் இயற்றப்படும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவித்துள்ளார்.

இதற்கு இணங்காத சமூக ஊடக தளங்களுக்கு எதிராக அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய சட்ட மூலமானது எதிர்வரும் நவம்பர் மாத பிற்பகுதியில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு வருட காலம் அவகாசம் வழங்கப்படும்.

தொழில்நுட்ப தளங்கள் தடையை எவ்வாறு செயல்படுத்துவது என்பதைக் கண்டறிவதற்காகவே இவ்வாறு ஒரு வருட அவகாசம் வழங்கப்படும் என்றும் அவுஸ்திரேலிய பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு பிரான்ஸ் அரசாங்கம் 15 வயதிற்குப்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்க முன்மொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்