
லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோர் இன்று நீதிமன்றில் முன்னிலை!
சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது மனைவிக்கு எதிரான வழக்கு இன்று வியாழக்கிழமை நுகேகொட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கடந்த 31ஆம் திகதி, மிரிஹான பகுதியில் உள்ள அவரது மனைவியின் இல்லத்திலிருந்து இலக்கத் தகடு இல்லாத கார் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கைது செய்யப்பட்டார்.
கண்டி – கட்டுகஸ்தொட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட அவர், கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, நுகேகொடை – கங்கொடவில மேலதிக நீதவான் சஞ்சய லக்மால் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.
அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு இதன்போது நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
