சட்டக்கல்லூரி மாணவியிடம் பணமோசடி!

சட்டக் கல்லூரி மாணவி ஒருவரிடம் பணமோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிபில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கௌடெல்ல அளுத்வத்த பிரதேசத்தை சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவருக்கு அழைப்பை ஏற்படுத்தி, தனியார் தொலைபேசி நிறுவனமொன்றில் இருந்து பேசுவதாகவும், ஐந்து லட்சம் ரூபாய் கொடுப்பனவு வழங்குவதாக கூறி, ஐந்து இலட்சத்து ஐம்பத்து நான்காயிரத்து முப்பது ரூபாய் பணம் பெறப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்