சுவிட்சர்லாந்தில் 93 வயதான வாகன ஓட்டுநர் விபத்தில் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தின் கிளரூஸ் மாநிலத்தில் இன்று புதன்கிழமை நண்பகல்; இடம்பெற்ற வாகன விபத்தில் 93 வயதுடைய வாகன ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கிளரூஸ் வெய்சன்பெர்கனுக்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் இன்று நண்பகல் 1:30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் 93 வயதான சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

93 வயதான சாரதி வெய்சன்பெர்ஜ் மலையில் தனது காரில் தனியாக மேல்நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்து கொண்டிருந்த விவசாய வாகனம் ஒன்றில் மோதுண்டு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 80 மீட்டர் சாய்வில் விழுந்தது. வாகன ஓட்டி வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. விமான மீட்பு சேவையின் அவசர மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தந்திருந்த போதும் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்