
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்ல மறுத்த சாரதி, நடத்துனர் பணி இடைநிறுத்தம்
பாடசாலை மாணவர்களை பேருந்தில் ஏற்றிச் செல்ல மறுத்த சாரதி மற்றும் நடத்துனர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதாக களுத்துறை மாவட்ட பிரதான பிராந்திய முகாமையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அளுத்கமவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அளுத்கம டிப்போவிற்கு சொந்தமான பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அலுவலகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அளுத்கம, மத்துகம, களுத்துறை ஆகிய டிப்போக்களுக்கு உட்பட்ட பேருந்துகள் களுத்துறை மற்றும் வாத்துவைக்கு இடையில் நீண்ட நாட்களாக காத்திருக்கும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்ல மறுப்பதாக தற்போதைய தலைவர் ரமல் சிறிவர்தனவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நடவடிக்கை மேற்கொண்ட தினத்தன்று மாத்திரமே பேருந்து நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
