இரு கைதிகளுக்கு இடையில் தகராறு: கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் காயம்

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரு கைதிகளுக்கு இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தகராறில் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சந்தேக நபரான கைதியும் காயமடைந்த கைதியும் சம்பவத்தன்று சிறைச்சாலையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேக நபரான கைதி காயமடைந்த கைதியைக் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, காயமடைந்தவர் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்