பொலன்னறுவையில் மர்மமான முறையில் வர்த்தகர் மரணம்!

பொலன்னறுவை, முஸ்லிம் கொலனியா பகுதியில் வர்த்தகர் ஒருவர் தனது வியாபார நிலையத்திலிருந்து வீடு திரும்பிய போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கீழே விழுந்து பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கும் போதே உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்துருவெல, முஸ்லிம் கொலனியாவில் வசிக்கும் 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த நபர் ஒரு வர்த்தகர் என்பதும், அவர் தனது வியாபார இடத்திலிருந்து காரில் வீட்டிற்கு வந்திருப்பதும், கார் இயக்கத்தில் இருக்கும் போதே நெஞ்சில் இரத்தக் காயத்துடன் கீழே விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது தாக்குதல் சம்பவமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்