சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 2ஆம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பதுளை, காலி, களுத்துறை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்