
தனியார் வைத்தியசாலையில் பெண் வெட்டிக்கொலை
திருகோணமலையில் தனியார் வைத்தியசாலையில் இன்று அதிகாலை பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பிரித்தானியாவின் லண்டனில் இருந்து அண்மையில் வருகை தந்த குறித்த பெண், தனது கணவருக்கு சொந்தமான வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதே மாடியில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் அவரது மைத்துனரே அந்தப் பெண்ணை தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
63 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், கொலைச் சம்பவம் தொடர்பில் 55 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம்தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
