குறைவடையும் தங்கத்தின் விலை

இலங்கையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடர்ச்சியாக உயர்வடைந்த தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாக குறைவடைந்து செல்கின்றது.

தங்கத்தின் இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 802,163 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் தங்கம் ஒரு கிராம் 28,300 ரூபாவாகவும் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 226,400 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராம் 25,950 ரூபாவாகவும் 22 கரட் தங்கப் பவுண்  ஒன்று 207,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 24,770 ரூபாவாகவும் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 198,100 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்