
ஊடகவியலாளர் தங்கவேல் சுமன் “இளம் கலைஞர்” விருதுக்கு தெரிவு!
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2024 ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள இலக்கிய விழாவில் “இளம் கலைஞர்” விருதுக்கு ஊடகவியலாளர் தங்கவேல் சுமன் (எஸ்.ரி.சுமன்) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த மாதம் இறுதிப் பகுதியில் திருகோணமலையில் குறித்த விழா நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்கவேல் சுமன் சிறு வயது முதல் தற்போது வரை கூத்துக்கலையில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றதன் அடிப்படையில் இளம் கலைஞர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாவட்டவான் கிராமத்தை சொந்த இடமாகக் கொண்ட தங்கவேல் சுமன் யாழ்ப்பாணத்தில் கெப்பிட்டல் தொலைக்காட்சியின் ஊடகவியலாளராக தற்போது பணிபுரிகின்றார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
