பேருந்து விபத்து: 36 பேர் பலி
உத்தரகாண்டில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
உத்தரகாண்டின் அல்மோரா எல்லையில், ராம்நகரில் குபி அருகே 46 பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 36 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்