தனமல்வில – வெல்லவாய வீதியில் விபத்து: இருவர் காயம்

தனமல்வில – வெல்லவாய வீதியில் கிவுல்ஆர பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

வீதியில் பயணித்த லொறியின் சக்கரமொன்றில் காற்று வெளியேறியதால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது லொறியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்