யாழ் நல்லூர் பிரதேச சபை ஊழியர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் நல்லூர் பிரதேச சபை ஊழியர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.

சடலமாக மீட்கப்பட்டவர் நல்லூர் பிரதேச சபையில் மேற்பார்வையாளராகக் கடமையாற்றும் 43 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார், சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்