நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய மத்திய, சபரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மின்னல் தாக்கங்களிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக நடவடிக்கை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்