
செட்டிகுளத்தில் இருந்து மாத்தறைக்கு மாடு கடத்தல் முறியடிப்பு: 12 எருமை மாடுகள் மீட்பு
செட்டிகுளம் பகுதியில் இருந்து மாத்தறைக்கு கொண்டு செல்லப்பட்ட 12 எருமை மாடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை பகுதியைச் சேர்ந்த ஒருவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே லொறி ஒன்றில் 12 மாடுகள் வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இருந்து மாத்தறைக்கு கொண்டு செல்லப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டது.
முறையான அனுமதிப் பத்திரமின்றி குறித்த மாடுகள் கொண்டு செல்லப்பட்டமை விசாரணையின் போது தெரிய வந்ததையடுத்து, 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான 12 எருமை மாடுகளும் மீட்கப்பட்டதுடன் அதனை கொண்டு சென்ற லொறியின் சாரதி கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணைகளின் பின் அனுமதியின்றி மாடுகளை கொண்டு சென்றமை மற்றும் மிருக வதைச் சட்டம் என்பவற்றின் அடிப்படையில் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
