அரச சொத்துக்கள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

அரசாங்கத்திற்குச் சொந்தமான சொத்துக்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்துதல், கடத்திச் செல்லல் அல்லது மறைத்து வைத்திருத்தல் ஆகியவை தொடர்பில் முறையிட அவசர தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி 1997 என்ற அவசர தொலைபேசி இலக்கமானது 24 மணி நேரமும் சேவையில் இருக்கும் எனவும் இந்த அவசர தொலைபேசி இலக்கத்தின் மூலம் பொலிஸ் அதிகாரிகளினால் இடம்பெறும் மோசடிகள் மற்றும் இலஞ்ச ஊழல் குற்றங்களையும் முறையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு இடம்பெறும் பல்வேறு துஷ்பிரயோகங்கள், மோசடிகள் மற்றும் தொந்தரவுகள் தொடர்பில் முறையிடுவதற்கும் இந்த அவசர தொலைபேசி இலக்கத்தினை பயன்படுத்த முடியும்.

தகவல் அளிப்பவர்களின் அடையாளம் மற்றும் தனிப்பட்ட விபரங்கள் முழுமையாகப் பாதுகாக்கப்படும் எனவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்