பொகவந்தலாவையில் கால்வாயிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

நுவரெலியா, பொகவந்தலாவை, கொட்டியாகலை பிரதேசத்தில் உள்ள கால்வாயிலிருந்து இன்று சனிக்கிழமை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டியாகலை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் சிலர் கால்வாயில் சடலம் இருப்பதைக் கண்டு உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

கொட்டியாகலை தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் குழாய்களுக்கு நீர் இணைப்பை வழங்கும் கால்வாயிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமானது பிரேதப் பரிசோதனைக்காக திக்ஓயா ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்