துபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஏலக்காயுடன் ஒருவர் கைது

துபாயில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகுதி ஏலக்காயுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு விமான நிலைய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 12 இல் வசிக்கும் 48 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து 76 கிலோ 300 கிராம் ஏலக்காய் மற்றும் 08 கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்