
தட்டம்மை சிறப்பு தடுப்பூசி வாரம் பிரகடனம்
நவம்பர் 4 முதல் 9 வரை தட்டம்மை சிறப்பு தடுப்பூசி வாரமாக அறிவிக்க சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இலங்கையை தட்டம்மை இல்லாத நாடாக பிரகடனப்படுத்திய போதிலும், 2023 ஆம் ஆண்டிலிருந்து நாடு மீண்டும் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
20-30 வயதுக்குட்பட்டவர்களே இதன் போது அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒன்பது வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இந் நோய் அதிகமாக ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 20 – 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசியும், ஒன்பது மாதங்கள் முதல் 19 வயது வரையிலான குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசியும் வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
