
அறுகம்பே தாக்குதல் திட்டம்: வெளிநாட்டு பிரஜை உட்பட அறுவர் கைது
அறுகம்பே பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் மாலைதீவு பிரஜை உட்பட 6 பேர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது பயங்கரவாத புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அறுகம்பை பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்ததாக கடந்த 23ஆம் திகதி தகவல் வெளிவந்ததையடுத்து குறித்தபகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிட தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
