
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காலி – கராப்பிட்டிய வைத்தியசாலை வைத்தியர்கள்
காலி – கராப்பிட்டிய தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கின்றது.
குறித்த வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவுக்குப் பொறுப்பான விசேட வைத்திய நிபுணர், அங்குள்ள ஏனைய வைத்தியர்களை அச்சுறுத்தியதாகத் தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிமுதல் அங்குள்ள வைத்தியர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்று சனிக்கிழமை வரை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
