முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருடையது என சந்தேகிக்கப்படும் ஜீப் மீட்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் ஜீப் வாகனமொன்று நுகேகொடை குற்றவியல் விசாரணை பிரிவினால் மீட்கப்பட்டுள்ளது.

கொட்டாவ – லியனகொட பகுதியில் வைத்து குறித்த வாகனம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வாகனத்தை மீட்ட போது அதில் பதிவு செய்யப்பட்ட வாகன இலக்கத் தகடு காணப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்