ஸ்பெயினில் பாரிய வெள்ளம்: 95 பேர் பலி
வலென்சியாவின் கிழக்குப் பகுதியில் நேற்று புதன் கிழமை திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் 95 பேர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலென்சியாவின் சில பகுதிகளில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை எட்டு மணி நேரத்தில் ஒரு வருட மதிப்புள்ள மழை பெய்ததாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பாலங்கள் மற்றும் கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும் ஸ்பெயினின் நவீன வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் இது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஸ்பெயினில் மூன்றில் இரண்டு பங்கு சிட்ரஸ் பழங்களை உற்பத்தி செய்யும் பிராந்தியத்தில் உள்ள விவசாய நிலங்கள் மூழ்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
