மதுபோதையில் வீடொன்றினுள் அத்துமீறி நுளைந்து அச்சுறுத்தல் விடுத்த நபர்!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் மது போதையில் நபர் ஒருவர் வீடொன்றில் நுழைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
குறித்த வீட்டின் உரிமையாளர் இது தொடர்பில் தெரிவிக்கையில், தனது குழந்தை, மனைவியுடன் வீட்டில் இருந்த வேளை, மதுபோதையில் நபர் ஒருவர் அத்துமீறி உள்நுழைந்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததுடன் தனது மனைவி, பிள்ளைக்கும் கத்தியால் அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்துள்ளார்.
வீட்டிற்கு வெளியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள குறித்த குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிளின் மீது கத்தியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார்.
தனது மனைவி, பிள்ளை மீது கொலை முயற்சியில் ஈடுபட முயன்ற நபர் இறுதியாக மோட்டார் சைக்கிள் மீது கத்தியால் தாக்குதல் மேற்கொண்டு விட்டுச் சென்றது ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துவதால், சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்யுமாறு பொலிசாரை கேட்டுக் கொண்டுள்ளார்.
