பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தீபாவளி வாழ்த்து!

அனைவருக்கும் சுதந்திரம், கண்ணியம் மற்றும் உரிமையை அனுபவிக்கக் கூடிய ஒரு உலகைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது எனப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் மகிழ்ச்சியானதும், அர்த்தமுள்ளதுமான தீபாவளி பண்டிகையாக இன்றைய பண்டிகை அமைய வேண்டுமெனவும் அவர் தமது வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தீபாவளியின் போது, ஒளி நம் இல்லங்களை ஒளிரச் செய்வது போன்று, நீதி, கருணை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் ஆழமான உணர்வை நம் இதயங்களில் ஒளிர வைக்க வேண்டும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.