தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
அநுராதபுரம் – கெக்கிராவ முதுபெருமகம ஏரிக்கரைக்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் கெக்கிராவ பொலிஸாரால் இன்று புதன் கிழமை காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை, துந்தோட்ட அலவல பிரதேசத்தை சேர்ந்த மதுசங்க அமரசிங்க (வயது – 25) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
இதேவேளை குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் சில ஆடைகள் மற்றும் ஒரு ஜோடி காலணிகள் அடங்கிய பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
