கடந்த நான்கு வருடங்களில் 570 ரயில் தடம்புரள்வுகள்
கடந்த நான்கு வருடங்களில் புகையிரத தடம்புரள்வு தொடர்பில் 570 விபத்துகள் பதிவாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு முதல் புகையிரத பாதைகள் மற்றும் புகையிரத நிறுத்துமிடங்களில் இடம்பெற்றவை உட்பட மொத்தம் 570 ரயில் தடம் புரண்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
2020 ஆம் ஆண்டில் 98 தடம்புரண்ட சம்பவங்களும், 2021இல் 115 சம்பவங்களும், 2022இல் 132 சம்பவங்களும், 2023இல் 139 மற்றும் 2024இல் 86 தடம்புரண்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளது.
