முச்சக்கர வண்டி மீது மோதிய விமானம்: 4 விவசாயிகள் பலி

ஆபிரிக்க நாடான சூடானில்  சிறிய வகை விமானம் தரையிறங்கியபோது, முச்சக்கர வண்டி மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சூடானில் பயிர்களுக்குப் பூச்சி மருந்து தெளிப்பதற்குச் சிறிய விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றது. அதேபோல் சம்பவ தினத்தன்று சிறிய விமானம் ஒன்று பூச்சி மருந்து தெளிக்கும் பணியின் பின்னர் விவசாய நிலப்பகுதியில் உள்ள ஓடுபாதையில் தரையிறங்கியது.

இவ்வாறு தரையிறங்கிய விமானம் ஓடுபாதையில் வேகமாகச் சென்ற நிலையில் எதிரே வந்த முச்சக்கர வண்டி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் முச்சக்கர வண்டி கடுமையாகச் சேதம் அடைந்ததுடன் 4 விவசாயிகள் உயிரிழந்ததுள்ளதாகவும் 8 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.