மட்டக்களப்பில் ஒரே நேரத்தில் 8 வீடுகளில் கொள்ளை
மட்டக்களப்பு மண்டூர் பிரதேசத்தில் ஒரே இரவில் 8 வீடுகள் உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர் முதலாம் பிரிவிலுள்ள பிரதேசத்தில் நேற்று இரவு 8 வீடுகளின் யன்னல் கதவு, மற்றும் சமையலறை யன்னல் கதவுகளை உடைத்து வீடுகளுக்குள் உள்நுழைந்த திருடர்கள் இரு வீடுகளில் 60 பவுண் தங்க ஆபரணங்களை திருடியதுடன், ஏனைய வீடுகளில் எந்த விதமான பொருட்களும் திருடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு மோப்ப நாய்களுடன் தடயவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
