மானிப்பாயில் கசிப்புடன் சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்-
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில்  இன்றைய தினம் திங்கட்கிழமை  கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் 10 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த நபரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.