மரத்தின் கிளை வீழ்ந்ததில் வெளிநாட்டவர் காயம்
-பதுளை நிருபர்-
எல்ல ஒன்பது வளைவுப் பாலத்திற்கு அருகில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மரத்தின் கிளை தலையில் விழுந்ததில் வெளிநாட்டவர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்தவர் அபன்சோ கொமிஸ் (AFONSO GOMES) என்ற 58 வயதான வெளிநாட்டு பிரஜை என பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த வெளிநாட்டவர் சிகிச்சைக்காக பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.
