வெடி பொருட்களுடன் இரு சந்தேக நபர்கள் கைது

அநுராதபுரம், பதவிய – முதலாம் கட்டை பகுதியில் அனுமதிப் பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்ட வெடி பொருட்களுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்து 75 கிலோகிராம் நிறையுடைய வெடிமருந்து, 90 ஜெலடினயிட் குச்சிகள் மற்றும் 300 டெட்டனேடர் குச்சிகள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த வெடிபொருட்களைக் கொண்டு சென்ற காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதானவர்கள் ஹிதோகம மற்றும் மாபாலடிகுளம் பகுதிகளைச் சேர்ந்த 28 முதல் 30 வயதுக்கிடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.