தேர்தல் முறைபாடுகள் அதிகரிப்பு

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 716 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை 580 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மேலும் 136 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணுவதற்கான நடவடிக்கை இடம்பெறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பொதுத் தேர்தல் நவம்பர் 14ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள்  பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.