கிணற்றுக்குள் இருந்து கைக்குண்டுகள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் நேற்று சனிக்கிழமை காலை போர் காரணமாக பாவனையின்றி காணப்பட்ட காணியின் கிணற்றில் இருந்து அதிகளவான கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

யாழ். பருத்தித்துறை துறைமுகத்தை அண்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்துக்குப் பின்புறமாக இருந்த குறித்த காணியின் பாவனையற்ற கிணற்றைத் துப்பரவு செய்யும்போது இந்தக் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

போர் காரணமாக 35 வருடங்களாகப் பாவனையற்றிருந்த காணியில் இருந்த கிணற்றைத் துப்பரவு செய்யும்போதே இந்தக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிகவிசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.