ஜனாதிபதிக்கும் தனக்குமிடையில் கருத்து முரண்பாடு என வதந்திகளைப் பரப்ப சிலர் முயற்சி: பிரதமர்

ஜனாதிபதிக்கும் தமக்கு இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக சிலர் வதந்திகளைப் பரப்புவதற்கு முயற்சிப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு – அத்திட்டிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் புதிய தலைவராகத் தமக்கு நெருக்கமான, விருப்பமான ஒருவரை, தெரிவு செய்ததால் இந்த பிரச்சினை எழுந்துள்ளதாகக் கூறப்பட்டு வருவதாக  பிரதமர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பதவிகளுக்கான நியமனங்கள் தொடர்பான தீர்மானங்கள் ஒன்றாகக் கலந்தாலோசித்ததன் பின்னரே எடுக்கப்படும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.