நாட்டின் பல பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை மழையுடனான வானிலை நிலவக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சபரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழையுடனான வானிலை பதிவாகக்கூடும்.

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.

வடக்கு, வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வேகத்தில் வீசக் கூடுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது.