மட்டக்களப்பில் புகையிரத்தில் மோதுண்டு இளைஞன் உயிரிழப்பு
ஏறாவூர் நிருபர் – உமர் அறபாத் –
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு கடுகதி புகையிரதத்தில் மோதுண்டு ஏறாவூர் பகுதியில் இளைஞன் ஒருவர் இன்று வியாழக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் இருந்து இரவு 8.15மணியளவில் புறப்பட்ட புகையிரத்தில் மோதுண்டே இவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஏறாவூர் ஐயங்கேணி காட்டுமாமரத்தடி பிரதேசத்தை சேர்ந்த முகம்மது நுலார் முகம்மது முஜாஹித் (வயது-32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்தில் வைத்து சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி ஆளுஆ.நஸீர் சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .