
சம்பளத்தை அதிகரிக்க நான் ஒதுக்கிய நிதி எங்கே? – ரணில் விக்கிரமசிங்க கேள்வி
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதியமைச்சர் என்ற ரீதியில், தாம் எடுத்த அமைச்சரவை தீர்மானத்தை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மால் வீதியிலுள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம் பெற்றுள்ளது.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தாம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சம்பள அதிகரிப்பை வழங்க திட்டமிட்டமிட்டதாகவும், சம்பள அதிகரிப்பை வழங்க முடியாவிட்டால்இ அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்கே என்பதை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும், எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
