6 கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது

அம்பாந்தோட்டையில் கஜமுத்துக்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வலஸ்முல்ல போவல பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது இரண்டரைக்கோடி ரூபா பெறுமதியான 6 கஜ முத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றில் இன்று புதன் கிழமை ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.