கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் புதிய நியமனங்கள்!

-மூதூர் நிருபர்-
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் கிழக்கு மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஆளுநரால்  வழங்கப்பட்டன.
புதிய ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ஆளுநர்,  சுதந்திரமாக செயற்படுவதற்கு சகல அதிகாரங்களும் வழங்கப்பட்டு, அரசியல் தலையீடுகள் இன்றி தமது சேவைகளை ஆற்றக்கூடிய சூழலை உருவாக்குவதாக தெரிவித்தார்.
புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் 
தலைவர் – திரு. பி.எச்.என். ஜெயவிக்ரம (முன்னாள் திருகோணமலை மாவட்ட செயலாளர் – ஓய்வு)
உறுப்பினர்- திரு. கே. அருந்தவராஜா (முன்னாள் திருகோணமலை மேலதிக மாவட்டச் செயலாளர் – ஓய்வு)
உறுப்பினர் – திரு. ஜி.எல்.ஆரியதாச மாயா (முன்னாள் அம்பாறை பிரதேச செயலாளர் – ஓய்வு)
உறுப்பினர் – திரு. எஸ். ஹமீத் ரிபாஹிதீன் (ஓய்வு பெற்ற பாடசாலை ஆசிரியர்)
உறுப்பினர் – திரு. எஸ். முகமது இக்ரிமா (உதவி வெடிபொருட்கள் கட்டுப்பாட்டாளர்இ பாதுகாப்பு அமைச்சு)