வாகன விபத்து: மாணவன் உயிரிழப்பு
நாவுல மின்சார சபைக்கு முன்பாக, நேற்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாவுல – பெனலபொட பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட பிரேமோத் சத்சர என்ற பாடசாலை மாணவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, எதிரே வந்த கெப் வண்டி மோட்டார் சைக்கிளை மோதிய நிலையில் காயமடைந்த மாணவன், நாலந்தா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக, நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.
கெப் வண்டியின் சாரதி ஹசலக்க, பொம்பல்வ பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என்பதுடன், சந்தேகநபர் நாவுல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
