சட்டவிரோத சீன சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது
கொள்ளுப்பிட்டி, சமகி மாவத்தையில் உள்ள சீன பொருட்களை விற்பனை செய்யும் களஞ்சியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீன சிகரெட்டுகள் இன்று வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டதாக ஸ்ரீ ஜயவர்தனபுர கலால் நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்போது பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பத்தாயிரம் சீன சிகரெட்டுகள் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சிகரெட்டுகளை விற்பனைக்காக கொண்டு வந்து வைத்திருந்த 59 வயதுடைய சீன நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் சிகரெட் தொகையும் மத்திய கலால் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
