காட்டு யானைகள் மோதி எரிபொருள் ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரள்வு

மின்னேரிய – ரொட்டவௌ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை எரிபொருள் தாங்கிய ரயிலில் மோதி இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

இதன் காரணமாக எரிபொருள் தாங்கிய ரயில் தடம்புரண்டுள்ளதுடன் மட்டக்களப்பு – கொழும்பு ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த ரயிலின் இரண்டு தாங்கிகளில் இருந்து எரிபொருள் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் விபத்தில் காட்டு யானை ஒன்று காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இடம்பெறவிருந்த ரயில்வே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்