நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு : ஒருவர் உயிரிழப்பு!

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோயிலடி பகுதியில் நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக ஏற்பட்ட கைகலப்பினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கோயிலடி தம்பலகாமத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கந்தசாமி பேரின்பராசா (வயது 35) என்பவராவார்

சம்பவத்துடன் தொடர்புடைய கோயிலடி தம்பலகாமம் பகுதியை சேர்ந்த 22,36 வயதுடைய இருவரை தம்பலகாமம் பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்