தடுப்பூசி செலுத்தியதால் சுகவீனமடைந்த மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
களுத்துறை – அங்குருவத்தோட்ட பகுதியில் HPV தடுப்பூசி செலுத்திய 12 வயதுடைய பாடசாலை மாணவிகள் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்குருவத்தோட்ட – வெனிவேல்பிட்டிய கனிஷ்ட கல்லூரியில் தரம் 7 இல் கல்வி பயிலும், 5 மாணவிகளே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாடசாலையில் 26 மாணவிகளுக்கு HPV தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், அதில் 5 மாணவிகள் சுகவீனமடைந்துள்ளதாகவும் அங்குருவத்தோட்ட பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
HPV தடுப்பூசி செலுத்திய பின்னர் 5 மாணவிகளுக்குத் தலைவலி, வயிற்று வலி மற்றும் தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து அவர்கள் ஹல்தொட்ட பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹொரண மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
