ஆசிய கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை ஏ குழாம் வீரர்கள் அறிவிப்பு!

ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான 6ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை ஓமானில் நடைபெறவுள்ள நிலையில் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை ஏ குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக் கிண்ணத் தொடரில் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் ஏ அணிகள் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளின் சிரேஷ்ட அணிகள் பங்கேற்கவுள்ளன.

இதன்படி, குழு ஏ இல் இலங்கை ஏ, பங்களாதேஷ் ஏ, ஆப்கானிஸ்தான் ஏ மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகளும் குழு பி இல் இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இலங்கை ஏ அணியின் தலைவராக லஹிரு உதார நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், தேசிய அணியில் விளையாடியுள்ள ரமேஷ் மெண்டிஸ், நுவனிந்து பெர்னாண்டோ மற்றும் சஹன் ஆராச்சிகே ஆகியோர் அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 18ஆம் திகதி இலங்கை தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் ஏ அணியை எதிர்கொள்கிறது.